கீரமங்கலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான கைப்பந்து போட்டிகளில் ஆண்கள் பிரிவில் எஸ்.ஆர்.எம். அணியும், பெண்களுக்கான பிரிவில் ஐ.சி.எப். அணியும் வெற்றி பெற்று முதல் பரிசை பெற்றன.
கைப்பந்து போட்டி
புதுக்கோட்டை மாவட்டம், கீரமங்கலம்-வேம்பங்குடி மேற்கு கைப்பந்துக் கழகம் சார்பில் 6-வது ஆண்டாக மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கைப்பந்து போட்டி கீரமங்கலம் அருகே வேம்பங்குடி கலைவாணர் திடலில் நடந்தது. முதல் நாள் போட்டியை மாவட்ட கலெக்டர் கவிதா ராமு தொடங்கி வைத்தார். இரண்டாம் நாள் போட்டிகளை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டிகள் 3 நாட்கள் இரவில் நடந்தது. இரண்டாவது மற்றும் 3-வது நாட்களில் கனமழை பெய்த போதும் விழாக்குழுவினர் விளையாட்டுத் திடலில் இருந்த தண்ணீரை அகற்றி மைதானத்தை தயார் செய்து போட்டிகளை நடத்தினார்கள்.
பரிசுகளும், பாராட்டும்...
நேற்று இரவு இறுதி போட்டிகள் நடந்தது. போட்டிகள் முடிவில் ஆண்கள் பிரிவில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை சென்னை எஸ்.ஆர்.எம். அணியும், 2-வது பரிசை தமிழ்நாடு போலீஸ் அணியும், 3-வது பரிசை சென்னை ஐ.சி.எப். அணியும், 4-வது பரிசை சென்னை இந்தியன் ஓவர்சீஸ் வங்கி அணியும் பெற்றனர்.
இதேபோல பெண்கள் பிரிவில் முதல் பரிசு மற்றும் சுழற்கோப்பையை சென்னை ஐ.சி.எப். அணியும், 2-வது பரிசை ஈரோடு பி.கே.ஆர். அணியும், 3- வது பரிசை சென்னை சிவந்தி கிளப் அணியும், 4-வது பரிசை சென்னை எஸ்.ஆர்.எம். அணியும் பெற்றனர். தொடர் மழையிலும் தொடர்ந்து விளையாடி ரசிகர்களை உற்சாகப்படுத்திய விளையாட்டு வீரர், வீராங்கனைகளை விழாக்குழுவினர், சிறப்பு விருந்தினர்கள், ரசிகர்கள் பாராட்டினார்கள். விளையாட்டு போட்டிகளை சிவகுருநாதன் மற்றும் சரவணன் ஒருங்கிணைப்பு செய்தனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.