புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி சொத்து வரி உயர்வு கண்டித்து - SDPI கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பெட்ரோல் டீசல் கேஸ் விலைவாசி உயர்வு - 150% சொத்து வரி உயர்வு - ஒன்றிய & மாநில அரசு கண்டித்து - கண்டன ஆர்ப்பாட்டம் - SDPI கட்சி - புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்
விலைவாசி உயர்வுக்கு காரணமாக அமையும் அநியாய பெட்ரோல் டீசல் கேஸ் விலை உயர்வை திரும்பப் பெற ஒன்றிய அரசை கண்டித்தும் மக்களின் வாழ்வாதாரத்திற்கு பெரும் நெருக்கடியான சூழ்நிலை காலத்தில் 150% சொத்து வரியை உயர்த்திய தமிழக அரசினை கண்டித்து மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைமை அறிவித்துள்ளது அதன் அடிப்படையில் புதுக்கோட்டை மேற்கு மாவட்டம் சார்பாக புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் புதுக்கோட்டை நகரம் ஆலங்குடி கரம்பக்குடி கந்தர்வகோட்டை இலுப்பூர் அன்னவாசல் உள்ளிட்ட நகரங்களில் இந்த எஸ்டிபிஐ கட்சியின் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது அதன் பகுதியாக 12-4-2022 மாலை 5.00 மணி அளவில் புதுக்கோட்டை தலைமை தபால் நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை நகர தலைவர் முகமது சாதிக் அவர்கள் தலைமை வகித்தார் இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னிலையாக எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட பொதுச்செயலாளர் ஜகுபர் அலி அவர்கள் மாவட்ட செயலாளர் முகமது அலி ஜின்னா அவர்கள் மற்றும் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர் இந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை மற்றும் சிறப்பு அழைப்பாளராக எஸ்டிபிஐ கட்சியின் புதுக்கோட்டை மேற்கு மாவட்ட தலைவர் H.ஸலாஹுதீன் அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரையாற்றினார்கள் மேலும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் ஏரியா தலைவர் தௌலத் அலி அவர்களும் கட்சியின் மாவட்ட பொருளாளர் ஹசனுதீன் மாவட்ட வர்த்தக அணி தலைவர் ஷேக் அலாவுதீன் மாவட்ட வர்த்தக அணி செயலாளர் அப்துல் ஹக்கீம் மேலும் நகர துணை தலைவர் அன்சாரி சுற்றுச்சுழல் அணி மாவட்ட தலைவர் சிராஜுதீன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் நிறைவாக கட்சியின் நகர செயலாளர் பக்கீர் மைதீன் அவர்கள் நன்றி உரை வழங்கினார்கள் இவன் சமூக ஊடக அணி புதுக்கோட்டை மேற்கு மாவட்டம்


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments