‘பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை மாவட்டம்” மற்றும் மஞ்சப்பை அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடைபெற்றது




புதுக்கோட்டை மாவட்டத்தில் 75-வது சுதந்திர தின விழா, சுதந்திர திருநாள் அமுத பெருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் மற்றும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், ‘பிளாஸ்டிக் மாசில்லா புதுக்கோட்டை மாவட்டம்” மற்றும் மஞ்சப்பை அவசியம் குறித்த விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நேற்று நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் இருந்து மாரத்தான் ஓட்டத்தை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி கொடியசைத்து தொடங்கி வைத்தார். இதில் 100-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். அண்ணாசிலை, பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் வழியாக 4.5 கி.மீ. தூரம் சென்று மறுபடியும் மாவட்ட விளையாட்டரங்கத்தை அடைந்தது. இந்த மினி மாரத்தான் ஓட்டத்தில் கலந்துகொண்ட அனைவருக்கும் மஞ்சப்பை வழங்கப்பட்டது. இதில் வெற்றி பெற்றவர்களுக்கு அமுதப் பெருவிழா இறுதி நாளில் பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்படும். இந்த மாரத்தான் ஓட்டத்தில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் குணசேகரன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் சாமி.சத்தியமூர்த்தி, மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலர் குமரன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments