வேப்பங்குடியில் நிறுத்தப்பட்ட திருச்சி-மீமிசல் சாலை பணியை உடனே தொடங்கக்கோரி பொதுமக்கள் மறியல்
திருவரங்குளம் ஊராட்சி ஒன்றியம், வேப்பங்குடி திருச்சி-மீமிசல் சாலை பணி ஓராண்டுக்கு முன்பு ரூ.1 கோடியே 65 லட்சம் செலவில் தொடங்கி நடந்து வந்தது. பின்னர் அந்த பணிகள் நடைபெறாமல் நின்றது. இதனால் சாலைகளில் அவ்வழியாக செல்லும் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்

மீண்டும் சாலை பணியை உடனடியாக தொடங்கி  தரமான முறையில் சாலை அமைத்து தரக்கோரி அப்பகுதி பொதுமக்கள் திருவரங்குளம் கடை வீதி புதுக்கோட்டை- ஆலங்குடி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த ஆலங்குடி போலீசார் மற்றும் நெடுஞ்சாலைத்துறை உதவி செயற்பொறியாளர் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் ேபச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது வருகிற மே மாதம் 30-ந் தேதிக்குள் சாலை பணியை முடித்து தருவதாக உதவி செயற்பொறியாளர் வாக்குறுதி அளித்தார். அதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments