அம்மாபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா நடத்திய கண்டன ஆர்ப்பாட்டம்
அம்மாபட்டினத்தில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது “ராம நவமி” ஊர்வலங்களின் பெயரால் கர்நாடகா, குஜராத், ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், பீகார், கோவா, மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் முஸ்லிம்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் அனைத்தும், ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம் சமூகத்தின் மீதான எதிர்ப்புக் கலவரங்களுக்கான இந்துத்துவா அமைப்புகளின் திட்டமிட்ட முயற்சியின் ஒரு பகுதியாகும். சமீபத்தில் ஹரித்வாரிலும், நாட்டின் பிற பகுதிகளிலும் சங்பரிவார் நிகழ்ச்சிகளில் முஸ்லிம் இனப்படுகொலைக்கான பகிரங்க அழைப்புகள் விடுக்கப்பட்டன. இதன் நீட்சிகளாகவே ராம நவமி கலவரங்களை பார்க்க வேண்டியுள்ளது. சங்பரிவார்களின் செயல்திட்டங்களின் வாயிலாக முஸ்லிம்களின் உயிர்களின் மீதும், மஸ்ஜிதுகளின் மீதும், உடமைகளின் மீதும் நிகழ்த்தப்பட்டு வரும் தொடர் தாக்குதல்களை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா தேசம் முழுவதும் கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்த முடிவு செய்தது. அதன் பகுதியாக இன்று, 15/04/2022 வெள்ளிக்கிழமை மாலை 4:00 மணியளவில் புதுக்கோட்டை மாவட்டம்,அம்மாப்பட்டிணம் பேருந்து நிலையம் அருகே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினார். ஆர்ப்பாட்டத்தில் பாப்புலர் ஃப்ரண்ட், SDPI கட்சி நிர்வாகிகள், பெண்கள், குழந்தைகள், இளைஞர்கள் என பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தங்களின் கண்டனங்களை பதிவு செய்தனர். இவன், சமூக ஊடக அணி SDPI கட்சி புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments