அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆய்வு
இலுப்பூர் கல்வி மாவட்டம் அன்னவாசல் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வின் போது ஆசிரியர் மற்றும் மாணவர் வருகை சரியாக உள்ளதா?, பள்ளிவளாகம் தூய்மையாக உள்ளதா? என்பதை பார்வையிட்டார். பின்னர் பள்ளி தலைமையாசிரியரிடம் பள்ளியில் இடிக்கப்பட வேண்டிய நிலையில் உள்ள கட்டிடங்கள், கூடுதலாக தேவைப்படும் வகுப்பறைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்தார். பின்னர் மாணவ- மாணவிகளிடம் கேள்விகள் கேட்டு கற்றல் அறிவுகளை ஆய்வு செய்தார். சிறப்பாக பதிலளித்த மாணவர்களை பாராட்டினார். ஆய்வின் போது அன்னவாசல் வட்டாரக்கல்வி அலுவலர்கள் கலா, ஷெலின், பள்ளி தலைமையாசிரியர் அந்தோணிராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments