புதிய ரெயில்வே கால அட்டவணை பதாகை வைக்கப்படுமா?

புதுக்கோட்டையில் புதிய ரெயில்வே கால அட்டவணை பதாகை வைக்கப்படுமா? என பயணிகள் எதிர்பார்த்து உள்ளனர்.
புதுக்கோட்டை ரெயில் நிலையம் வழியாக நாள்தோறும் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரெயில்கள் என 20-க்கும் மேற்பட்ட ரெயில்கள் சென்று வருகின்றன.  இந்த நிலையில் புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரெயில்கள் பற்றிய கால அட்டவணை போர்டு மற்றும் பதாகை பழைய நேரப்படியே உள்ளது. தற்போது அமலில் உள்ள புதிய ரெயில்வே கால அட்டவணை பதாகை ரெயில் நிலையத்தில் வைக்கப்படவில்லை. அதற்கு பதிலாக ரெயில் நிலைய டிக்கெட் முன்பதிவு மைய கவுண்ட்டரில் உள்ள கண்ணாடியில் சாட்டில் ஸ்கெட்சால் வண்டி எண், ரெயில்கள் விவரம், வந்து செல்லும் நேரம் என வரிசைப்படுத்தி எழுதப்பட்டுள்ளது.

இந்த சிறிய அட்டவணையில் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துகளை அருகில் நின்று பார்த்தால் தான் நேரம் விவரம் தெரியவரும். ஒரே நேரத்தில் 3-க்கும் மேற்பட்ட பயணிகள் நின்று அந்த அட்டவணையை பார்க்க சிரமப்படக்கூடிய நிலை உள்ளது. ஏனெனில் அதில் உள்ள எழுத்துக்கள் சிறியதாக உள்ளது. எனவே புதுக்கோட்டை ரெயில் நிலையத்திற்கு வந்து செல்லும் ரெயில்களின் புதிய எண் விவரம், நேரம் பற்றிய அட்டவணையை ஒரு பதாகை அல்லது போர்டில் பெரிய எழுத்துகளில் தெரியும்படி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments