இலங்கை சிறையில் அடைக்கப்பட்ட புதுக்கோட்டை மீனவர்கள் உள்பட 19 பேர் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களுக்கு நிபந்தனையும் விதிக்கப்பட்டது.
சிறையில் அடைப்பு
ராமேசுவரத்தை சேர்ந்த 16 மீனவர்கள், புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினம் பகுதியை சேர்ந்த 3 மீனவர்களை எல்லை தாண்டி வந்து மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவர்களது 3 விசைப்படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
யாழ்ப்பாணம் சிறையில் இருந்த இந்த 19 மீனவர்களும் நேற்று இலங்கையின் ஊர்க்காவல்துறை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது, இந்த மீனவர்கள் இன்னும் 10 ஆண்டுகளுக்கு எல்லை தாண்டி இலங்கை கடல் பகுதிக்குள் மீன்பிடிக்க வரக்கூடாது, அதை மீறி வந்தால் 1½ ஆண்டு் சிறை தண்டனை விதிக்க நேரிடும் என்ற நிபந்தனையுடன் அவர்கள் அனைவரையும் விடுதலை செய்து நீதிபதி உத்தரவிட்டார். அவர்களது படகு உரிமையாளர்கள் ஜூலை மாதம் 15-ந்தேதி ஆஜராக வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.
ஏமாற்றம்
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட நிலையிலும் மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாததால் மீனவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். விடுதலை செய்யப்பட்ட மீனவர்கள் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.