ஆவுடையார்கோவில் : இடிந்த வீட்டை சரி செய்ய ஏழை மாணவிக்கு நிதி உதவி செய்த பள்ளி ஆசிரியர்கள்.




இடிந்த வீட்டை சரி செய்ய ஏழை மாணவிக்கு பள்ளி ஆசிரியர்கள் நிதி உதவி செய்தனர். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கல்வி மாவட்டம் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளியில் மேல்நிலை இரண்டாமாண்டு அறிவியல் பிரிவில் பயிலும் ரா.காளீஸ்வரி (த/பெ ராஜேந்திரன் 4/220, கீழக்குடியிருப்பு, ஒக்கூர்) என்ற மாணவியின் வீடு கடந்த 15நாட்களுக்கு முன்னர் இடிந்து விட்டது. சிறு வயதியிலேயே தந்தையை இழந்து தாயுடன் வசித்து வரும் ஏழை மாணவிக்கு ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் மற்றும் அனைத்து ஆசிரியர்கள் உதவியுடன் நேற்று ( 20-04-2022) அவர்கள் இல்லத்திற்கு சென்று ₹20000 (இருபதாயிரம் மட்டும்) வீடு கட்ட நிதிவழங்கப்பட்டது.


இந்நிதியை பள்ளித் தலைமையாசிரியர் தாமரைச்செல்வன்,ஆசிரியர்செயலர் குமார், வகுப்பாசிரியர் செந்தில்குமார், பட்டதாரி ஆசிரியர் செல்வாஷாஜி ஆகியோர் பள்ளியின் சார்பாக மாணவி காளீஸ்வரி மற்றும் அவரது தாயாரிடம் வழங்கினார்கள்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments