அன்னவாசல் அருகே கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது 1½ கிலோ பறிமுதல்




புதுக்கோட்டை மாவட்டத்தில் கஞ்சா விற்பனை செய்த 6 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் அவர்களிடமிருந்து 1½ கிேலா கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

கஞ்சா விற்பனை

அன்னவாசல் அருகே புல்வயல் உலகநாயகி அம்மன் கோவில் பகுதியில் உள்ள காட்டு பகுதியில் கஞ்சா விற்கப்படுவதாக புதுக்கோட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தனிப்படை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனையடுத்து தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையில் அப்பகுதியில் போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பகுதியில் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த புதுக்கோட்டை அம்பாள்புரம் பகுதியை சேர்ந்த விஜய் (வயது 23), செல்லுகுடியை சேர்ந்த சின்னத்துரை (22), நிலையப்பட்டியை சேர்ந்த கோபி (22), அதேபகுதியை சேர்ந்த பிரவின்குமார் (19) ஆகிய 4 பேரை போலீசார் காட்டுக்குள் வைத்து வளைத்து பிடித்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 1 கிலோ 100 கிராம் கஞ்சாவை கைப்பற்றினர். பின்னர் அன்னவாசல் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டது.

4 பேர் கைது

இதுகுறித்து அன்னவாசல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் புதுக்கோட்டை அம்பாள்புரம் காலனி பகுதியை சேர்ந்த காந்திமதி உள்ளிட்ட 5 பேர்மீது வழக்குப்பதிவு செய்து விஜய், சின்னத்துரை, கோபி பிரவின்குமார் ஆகிய 4 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

2 பேர் கைது

புதுக்கோட்டை டவுன் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மீன் மார்க்கெட் அருகே கஞ்சாவை விற்பனைக்காக வைத்திருந்த ராஜகோபாலபுரத்தை சேர்ந்த கணேசன் (45), அடப்பன் வயலை சேர்ந்த அப்துல்லா (31) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 500 கிராம் கஞ்சா மற்றும் ரூ.600- ஐ போலீசார் பறிமுதல் செய்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments