மணமேல்குடி-யில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம்
மணமேல்குடி தாலுகா அலுவலகத்தில் மீனவர்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. இதற்கு மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்னப்பன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் அறந்தாங்கி வருவாய் அலுவலர் சொர்ண ராஜ் கலந்துகொண்டு மீனவர்களின் குறைகளை கேட்டறிந்தார். கூட்டத்தில் மீன்வளத்துறை சார்பாக மீனவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சலுகைகள் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. கூட்டத்தில் மணமேல்குடி தாசில்தார் ராஜா, அமலாக்கப்பிரிவு இன்ஸ்பெக்டர் சரவணன், மின்வாரிய அதிகாரி லூர்து சகாயராஜ் மற்றும் நாட்டுப்படகு மீனவர்கள், விசைப்படகு மீனவர்கள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments