உழவர் கடன் அட்டை பெற சிறப்பு முகாம் நாளை(24-04-2022) முதல் 01-05-2022 தேதி வரை நடைபெறுகிறது





இந்திய அரசின் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறையால், ‘‘உழவர்களுடனான கூட்டிணைவே நமது முன்னுரிமை” என்கிற சிறப்பு முகாம் நாடு முழுவதும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) முதல் வருகிற 1-ந் தேதி வரை நடைபெறுகிறது. இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் இந்த முகாம்களில் விண்ணப்பிக்கலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின் கீழ் விவசாயிகள் பயிர் கடனாக ரூ.3 லட்சம் வரையிலும், பால் பண்ணை, கால்நடை பராமரித்தல், மீன் வளர்ப்பு போன்ற வேளாண் உபதொழில் செய்வோர்க்கு ரூ.2 லட்சம் வரையிலும் வங்கிக்கடன் பெற முடியும். இத்திட்டத்தின் கீழ் அதிகபட்சமாக ரூ.3 லட்சம் வரை கடன் பெறலாம். உழவர் அட்டை மூலம் கடன் பெறும் விவசாயிகளிடம் 7 சதவீத வட்டி வசூலிக்கப்படும். மேலும், இக்கடன் பெற்ற விவசாயிகள் நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவிற்குள் முறையாக தவணை மாறாமல் திரும்ப செலுத்தினால் 3 சதவீதம் வரை வட்டி மானியம் பெறலாம். உழவர் கடன் அட்டை திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.1.60 லட்சம் வரை எவ்வித பிணையமும் இன்றி கடன் வழங்கப்படும். இதுவரை உழவர் கடன் அட்டை பெறாத விவசாயிகள் அனைவரும் நாளை முதல் 1-ந் தேதி வரை ஊராட்சிகளில் நடைபெறவுள்ள சிறப்பு முகாமில் உழவர் கடன் அட்டையை பெற்று பயன் பெறுமாறு கலெக்டர் கவிதாராமு தெரிவித்துள்ளார்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments