10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நாளை (25-04-2022) தொடங்குகிறது




10, 11, 12-ம் வகுப்புகளுக்கு செய்முறை தேர்வு நாளை  (திங்கட்கிழமை) தொடங்குகிறது.

செய்முறை தேர்வு

தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்புகளுக்கு அடுத்த மாதம் (மே) பொதுத்தேர்வு நடைபெறுகிறது. அதற்கு முன்பாக செய்முறை தேர்வு நாளை  (திங்கட்கிழமை) தொடங்கி வருகிற 2-ந் தேதி வரை நடக்கிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் செய்முறை தேர்வு தொடர்பாக மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலக வளாகத்தில் உள்ள தேர்வுக்கூட அரங்கில் மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர்கள், வட்டார வளமைய மேற்பார்வையாளர்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சாமி சத்தியமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது:-

புதுக்கோட்டை வருவாய் மாவட்டத்தில் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கான செய்முறைத்தேர்வு நாளை மறுநாள் (திங்கட்கிழமை) முதல் 28-ந் தேதி வரையும், 28-ந் தேதி முதல் மே 2-ந் தேதி வரை 2 கட்டங்களாக நடைபெறுகிறது.

2 மணி நேரம் தேர்வு

செய்முறை தேர்விற்கான கால அளவு 2 மணி நேரம் ஆகும். செய்முறை தேர்வானது இயற்பியல், வேதியியல், விலங்கியல், தாவரவியல், உயிரியல் பொதுப்பிரிவு மாணவர்களுக்கும், கணக்குப்பதிவியல், ஆடைவடிவமைப்பியல், மின்னியல், தணிக்கையியல், நர்சிங் போன்ற தொழில்கல்வி பிரிவு மாணவர்களுக்கும், 10-ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்கும் நடைபெறும்.

ஆசிரியர்கள் செய்முறை தேர்வினை சிறப்பாக நடத்திட வேண்டும். தமிழக அரசு அறிவித்துள்ள 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாணவர்கள் பயன்பெற எமிஸ் இணையதளத்தில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை மாணவர்கள் படித்த விவரங்களை விரைவில் பதிவு செய்திட வேண்டும். திசைமாறும் மாணவர்களை கண்டறிந்து ஆசிரியர்கள் நெறிப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments