தமிழகத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களில் மீன்களின் இனப்பெருக்க காலமாக கருதி விசைப்படகு மூலம் கடலுக்கு சென்று மீன் பிடிக்க தமிழக அரசால் தடை விதிக்கப்படும். அதேபோல் இந்த ஆண்டு கடந்த 15-ந் தேதி முதல் ஜூன் மாதம் 14-ந் தேதி வரை 61 நாட்கள் விசைப்படகு மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினம் துறைமுகத்தில் உள்ள 750-க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. ஆனால் நாட்டுப்படகு மீனவர்கள் வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க சென்று வருகிறார்கள்.
மீன்கள் விலை உயர்வு
குறிப்பாக நண்டு வலை, முரல் வலை, செங்கனி வலை, கணவாய் போன்ற வலைகளை பயன்படுத்தி மட்டும் மீன் பிடிக்க முடியும். மடி வலை, இழுவை வலை போன்றவற்றை பயன்படுத்தி மீன் பிடிக்க தடை செய்யப்பட்டுள்ளது. இதனால் கட்டுமாவடி மார்க்கெட்டில் மீன்கள் மற்றும் இறால் விலை கணிசமாக உயர்ந்துள்ளது.
700 கிராம் எடை கொண்ட ஒரு சிலுவை கெண்டை மீன் ரூ.150 முதல் ரூ.300-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கூறு கொடுவா மீன் ரூ.250 முதல் ரூ.450-க்கும், புள்ள முரல் மீன் ரூ.15 முதல் ரூ.25-க்கும், வெங்கனா பொடி மீன் ஒரு கூறு ரூ.100 முதல் ரூ.200-க்கும் இறால் ஒரு கிலோ ரூ.400 முதல் ரூ.600-க்கும் விற்பனையானது.
கருவாடு
இதேபோல் மற்ற வகை மீன்களும் கணிசமாக விலை உயர்ந்துள்ளது. கடல் மீன்களின் வரத்து குறைந்துள்ளதால் குளத்து மீன்களும், வளர்ப்பு இறால்களும் விற்பனைக்கு வருகிறது. ஆனால் கருவாடு விலையில் எந்த மாற்றமும் இல்லை. இன்னும் சில நாட்களில் கருவாடு விலையும் அதிகரிக்கும் என்றும், தடைக்காலம் முடிந்த பிறகே மீன்களின் விலை குறையும் என்று மீனவர்கள் தெரிவித்து உள்ளனர். மீன் விலை உயர்ந்ததால் கட்டுமாவடி மீன் மார்க்கெட் பொதுமக்களின் கூட்டம் குறைவாக இருந்தது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.