ஆவுடையார்கோவில்-லில் போதை பழக்கத்தை ஒழிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம்ஆவுடையார்கோவில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள் சார்பில், போதை இல்லா சமுதாயத்தை உருவாக்குவோம், போதை பழக்கத்தை ஒழிப்போம் என்பது குறித்த விழிப்புணர்வு ஊர்வலம் நடைபெற்றது. அறந்தாங்கி ஆர்.டி.ஓ. சொர்ணராஜ் தலைமை தாங்கினார். ஆவுடையார்கோவில் தாசில்தார் வெள்ளைச்சாமி முன்னிலை வகித்தார். ஊர்வலத்தை அரசு கல்லூரி முதல்வர் கண்ணன் தொடங்கி வைத்தார். தாலுகா அலுவலகத்தில் தொடங்கிய ஊர்வலம் ஆவுடையார்கோவில் கடை வீதிவழியாக சென்று யூனியன் அலுவலகத்தில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் மற்றும் கல்லூரி பேராசிரியர்கள், துணை தாசில்தார், வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். அறந்தாங்கி போலீஸ் துணை சூப்பிரண்டு தினேஷ்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments