கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல்: பிளே ஸ்டோரில் கூகுளின் புதிய கொள்கை எதிரொலி




கலிபோர்னியா: பிளே ஸ்டோரில் கூகுள் நிறுவனம் கொண்டு வந்துள்ள புதிய கொள்கை முடிவு காரணமாக ஆண்ட்ராய்டு போன்களில் கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல் எழுந்துள்ளது.

உலக அளவில் கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் இயங்கும் மொபைல் போன்களை பெருவாரியான மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதன் காரணமாக பயனர்களின் பிரைவசி கருதி கூகுள் நிறுவனம் அவ்வப்போது தனது கொள்கை முடிவுகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில் இப்போது பிளே ஸ்டோரில் கூகுள் கொண்டுவந்துள்ள புதிய கொள்கை மாற்றத்தினால் தேர்ட் பார்ட்டி கால் ரெக்கார்டிங் செயலிகளுக்கு சிக்கல் வந்துள்ளது.

வழக்கமாக கால் ரெக்கார்டிங் செயலிகள் 'Accessibility API'-ஐ பயன்படுத்தி போன்களில் மேற்கொள்ளப்படும் தொலைபேசி அழைப்புகளை ரெக்கார்டு செய்து வருகின்றன. அதை தடுக்கும் வகையில் அமைந்துள்ளது கூகுளின் புதிய கொள்கை முடிவு. அதனால் வரும் மே 11-ஆம் தேதி முதல் தேர்ட் பார்ட்டி கால் ரெக்கார்டிங் செயலிகளை பிளே ஸ்டோர் மூலம் ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்கள் போனில் இன்ஸ்டால் செய்ய முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இனி ஆண்ட்ராய்டு பயனர்கள் தங்களுக்கு வரும் அழைப்புகளை ரெக்கார்டு செய்ய சம்பந்தப்பட்ட செல்போன் உற்பத்தி நிறுவனங்கள் வழங்கியுள்ள பில்ட்-இன் கால் ரெக்கார்டிங் ஆப்ஷன் மூலமாக மட்டுமே ரெக்கார்ட் செய்ய முடியும். அதே நேரத்தில் போன்களில் API அக்சஸ் பெறும் செயலிகளை முன்கூட்டியே இன்ஸ்டால் (Pre Install) செய்த பயனர்களுக்கு இதனால் பாதிப்பு ஏதும் இருக்காது எனத் தெரிகிறது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments