தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை சார்பாக இஃப்தார் அழைப்பிதழ் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி
இராமநாதபுரம் மாவட்டம், திருவாடானை வட்டம், தொண்டி இந்து தர்ம பரிபாலன சபை இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கான சார்பாக இஃப்தார் அழைப்பிதழ் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி ஏப்ரல் 27 புதன்கிழமை நடைபெறுகிறது.

அன்பான இஸ்லாமிய சகோதர, சகோதரிகளே வணக்கம். வரலாற்று சிறப்பு வாய்ந்த தொண்டி மாநகரில் பன்னெடுங்காலமாக அனைத்து சமூக மக்களும் சகோதரத்துவத்துடன் வாழ்ந்து வருகிறோம். இந்த நிலையில் அமைதியாகவும், ஒற்றுமையாக வாழ அருள் தந்த இறைவனுக்கு நன்றியையும், இந்த நிலையை வரும் சந்ததியினருக்கு மேம்படுத்தி தர வேண்டிய பிரார்த்தனையுடன் தொடர்கிறோம்.

தொண்டி மாநகரில் அருமை இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் இஸ்லாமியர்களின் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு செய்யும் காலம் இது. தங்களின் கடமைகளில் ஒன்றான ரமலான் மாத நோன்பு நோற்கும் அனைத்து சகோதர, சகோதரிகளின் பிரார்த்தனைகள் மற்றும் தேவைகளை அறிந்த இறைவன் தங்களின் பிரார்த்தனைகளை, தேவைகளை நிறைவேற்ற வேண்டி எல்லாம் வல்ல இறைவனிடம் நாங்களும் பிரார்த்தனை செய்கிறோம். இதனை வெளிப்படுத்தும் விதமாக நடைபெறும் இந்த சகோதர சமூக அழைப்பான இஃப்தார் நிகழ்ச்சிக்கு தாங்கள் அன்பு கூர்ந்து வருகை தருமாறு தங்களை விரும்பி அழைக்கிறோம். அழைத்து மகிழும்...

தலைவர் மற்றும் நிர்வாகிகள், இந்து தர்ம பரிபாலன சபை, தொண்டி.

தொடர்புக்கு : 81244 52877, 99765 04051, 99440 12483
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments