நமணசமுத்திரத்தில் காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் மீண்டும் நின்று செல்லும் ரெயில்வே நிர்வாகம் அறிவிப்பு

 
புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரம் ரெயில் நிலையம் வழியாக காரைக்குடி-திருச்சி பயணிகள் ரெயில் இயக்கப்பட்டு வந்தது. இந்த ரெயில் நமணசமுத்திரம் ரெயில் நிலையத்தில் நின்று செல்வது வழக்கம். கடந்த 2 ஆண்டுகளாக ஏற்பட்ட கொரோனா தொற்று காரணமாக இந்த ரெயில் நிற்காமல் சென்றது. இந்நிலையில் காரைக்குடி -திருச்சி பயணிகள் ரெயில் நமணசமுத்திரம் ரெயில் நிலையத்திற்கு தினமும் காலை 7.30 மணிக்கு வந்து 7.32 மணிக்கு புறப்படும். அதேபோன்று இரவு 7.10 மணிக்கு வந்து 7.12 மணிக்கு புறப்படும் என ரெயில்வே நிர்வாகம் அறிவித்ததை அடுத்து கிராமமக்கள் காரைக்குடி -திருச்சி பயணிகள் ரெயிலுக்கு மேள தாளம் முழங்க மாலை அணிவித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments