வ.உ.சி. புகைப்பட கண்காட்சி பஸ் புதுக்கோட்டை வந்தது
கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரனார் பிறந்த நாளை முன்னிட்டு செய்தி மக்கள் தொடர்பு துறை சார்பில் அவருடைய வாழ்க்கை வரலாறு குறித்த புகைப்படக் கண்காட்சி பஸ் ஊர், ஊராக கொண்டு செல்லப்படுகிறது. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்திற்கு வ.உ.சிதம்பரனார் புகைப்பட கண்காட்சி பஸ் நேற்று வந்தது.
கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் கவிதாராமு கொடியசைத்து தொடங்கி வைத்தார். மேலும் வ.உ.சி. சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து கண்காட்சியை அவர் பார்வையிட்டார். வ.உ.சிதம்பரனாரின் பிறப்பு முதல் இறப்பு வரையிலும் உள்ள வாழ்க்கை குறிப்புகள், வரலாறுகள், சுதந்திர போராட்ட தியாகங்கள், செக்கிழுத்தல் உள்ளிட்ட பல்வேறு தகவல்கள் இடம் பெற்றுள்ளது. புதுக்கோட்டை கல்வி மாவட்டத்தில் ராணியார் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி, திரு இருதய மகளிர் மேல்நிலைப்பள்ளி, புதுக்கோட்டை அரசு முன்மாதிரி மேல்நிலைப்பள்ளி, பெருங்களூர் அரசு மேல்நிலைப்பள்ளி, கந்தர்வகோட்டை அரசு மகளிர் மற்றும் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியிலும் இந்த கண்காட்சியை மாணவ-மாணவிகள் பார்வையிட்டனர். தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) இலுப்பூர் கல்வி மாவட்டத்திலும், நாளை (புதன்கிழமை) அறந்தாங்கி கல்வி மாவட்டத்திலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது. முன்னதாக நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி சாமி.சத்தியமூர்த்தி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments