புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் கொரோனா மெகா தடுப்பூசி முகாம்

புதுக்கோட்டை மாவட்டத்தில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) 28-வது கொரோனா மெகா தடுப்பூசி முகாம் நடத்துதல் தொடர்பாக, மாவட்ட அளவிலான அனைத்துத்துறை அலுவலர்கள், தாசில்தார்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுடனான முன்னேற்பாடு கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் கவிதாராமு தலைமை தாங்கி பேசினார்.

அப்போது அவர் தெரிவிக்கையில், ‘‘தமிழக அரசின் உத்தரவின்படி கொரோனா மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதில் வருகிற 30-ந் தேதி (சனிக்கிழமை) மாபெரும் தடுப்பூசி முகாம்கள் நடைபெற உள்ளது.

விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

முன்களப்பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், மகளிர் சுயஉதவி குழுவினர் அதிக அளவில் கலந்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளவும், பொதுமக்களை அதிக அளவில் கலந்துகொள்ள செய்திட உள்ளாட்சி பிரதிநிதிகள், வட்டார அளவிலான அலுவலர்கள் தகுந்த முன்னேற்பாடு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தடுப்பூசி முகாம்கள் குறித்து பொதுமக்களிடையே அதிக விழிப்புணர்வு ஏற்படுத்தவும், ஆட்டோ விளம்பரம் போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ளாதவர்கள் மற்றும் 2-ம் தவணை தடுப்பூசி செலுத்த வேண்டியவர்களும், தடுப்பூசி முகாமில் தவறாது கலந்துகொள்ள செய்து தடுப்பூசி செலுத்தி கொள்ள தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது’’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கருப்பசாமி, துணை இயக்குனர்கள் (பொது சுகாதாரம்) அர்ஜுன்குமார், கலைவாணி உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments