தொண்டி அருகே இலங்கை அகதிகள் 2 பேர் வருகை: கடலோர காவல்துறையினர் விசாரணை




திருவாடானை: திருவாடானை அருகே தொண்டி கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை இலங்கையை சேர்ந்த 2 இளைஞர்கள் ஒரு படகில் வந்தனர். அவர்களை கடலோர காவல்துறையினர் விசாரணைக்காக மண்டபம் முகாமிற்கு கொண்டு சென்று விசாரித்து வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம், தொண்டி கடல் வழியாக  இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த ஜெயசீலன் மகன் சீலன் (27) மற்றும் எட்வர்ட் மகன் அருள்ராஜ் (34) ஆகிய  2 பேர்  இலங்கை யாழ்ப்பாணத்திலிருந்து வியாழக்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு சிறிய வகை விசைப்படகில் தொண்டி வந்தடைந்தனர். 


அவர்கள் அணிந்திருந்த ஆடைகளுடன் குயின்சி ராணி என்று பெயரிடப்பட்ட படகில் வந்த இருவரும் படகுக்கான ஆவணங்கள் மட்டுமே கொண்டுவந்துள்ளனர். அவர்கள் கடல்வழியாக வரும் போது அப்பகுதியில் மீன்பிடித்துக்கொண்டிருந்த மீனவர்களிடம் இது எந்த ஊர்? அருகே காவல் நிலையம் உள்ளதா? என்ற விபரங்களை கேட்டறிந்து தொண்டியில் கடற்கரை எதிரே உள்ள கடற்கரை காவல் நிலையம் வந்தடைந்தனர். 

அவர்களை கப்பற்படை காவல் துணை ஆய்வாளர் ராஜ்குமார் விசாரணை செய்து மண்டபம் அகதிகள் முகாமிற்கு அழைத்துச் சென்று மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments