புதுக்கோட்டை காவலர் சமுதாயக் கூடத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டியினை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் இன்று (29.04.2022) துவக்கி வைத்து பார்வையிட்டார்கள்.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் தெரிவித்ததாவது; சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் சத்துணவு திட்டத்தின் சார்பில் சத்துணவு பணியாளர்களுக்கான சமையல் போட்டி இன்றையதினம் துவக்கி வைக்கப்பட்டுள்ளது.
இப்போட்டியில் புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 13 ஊராட்சி ஒன்றியங்கள் மற்றும் புதுக்கோட்டை நகராட்சியை சேர்ந்த சமையலர்கள், உதவியாளர்கள் 28 பேர் கலந்து கொண்டனர். இதில் கவுணி அரிசி, முருக்கு, அதிரசம், வடை, சேமியா பாயாசம், முட்டை அவியல், எலுமிச்சை சாதம், சாம்பார் சாதம், கீரை சாதம், புளி சாதம்,
மாவு உருண்டை வகைகள், கீரை சூப்பு வகைகள், இனிப்பு வகைகள் போன்ற உணவு வகைகள் போட்டியில் கலந்து கொண்டவர்களால் தயார் செய்யப்பட்டிருந்தது.
மாணவர்களுக்காக பள்ளிகளில் சத்துணவு தயார் செய்யும் சமையலர்கள், உதவியாளர்களின் பணிகளை ஊக்கப்படுத்தி பரிசுகள் வழங்குவதற்காக இதுபோன்ற போட்டிகள் நடத்தப்படுகின்றன என மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.கவிதா ராமு,இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்தார்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு)
தேவிகா ராணி, வருவாய் கோட்டாட்சியர் அபிநயா, வட்டாட்சியர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.