அறந்தாங்கி-யில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த ரூ.3 லட்சம் திருட்டு
அறந்தாங்கி அருகே பொன்பேத்தியை சேர்ந்தவர் இளவரசன் (வயது 61). இவர் நேற்று குட்டை குளம் அருகே உள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் தனது மகள் வழி பேத்தி திருமணத்திற்காக சேர்த்து வைத்திருந்த ரூ.3 லட்சத்தை எடுத்தார்.
பின்னர் அறந்தாங்கி பஸ் நிலையம் அருகே உள்ள கடைக்கு மோட்டார் சைக்கிளில் சென்றார். பின்னர் சிறிது நேரம் கழித்து திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளில் வைத்து இருந்த ரூ.3 லட்சத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்றது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments