ரமலான் நோன்பு தொடங்கியது: கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில் சிறப்பு தொழுகை


கோபாலப்பட்டிணம் பள்ளிவாசல்களில்  சிறப்பு தொழுகை நடைபெற்றது.

இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று ரமலான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பது ஆகும். இந்த ரமலான் மாதத்தில்தான் மக்களுக்கு நேர்வழி காட்டக்கூடிய திருக்குர் ஆன் அருளப்பட்டது. ஹஜ்ஜை தவிர ஈமான் (இறை நம்பிக்கை), தொழுகை, நோன்பு, ஜகாத் (கட்டாயக்கொடை) ஆகிய 4 கடமைகளும் ஒரு சேர இந்த ரமலான் மாதத்தில் நிறைவேறுகிறது. இத்தகைய சிறப்புமிக்க ரமலான் மாத பிறை நேற்று மாலையில் தமிழகத்தில் பல்வேறு இடங்களில் தென்பட்டதை தொடர்ந்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் ரமலான் நோன்பை இஸ்லாமியர்கள் கடைப்பிடிக்கின்றனர்.

இந்த நிலையில் புதுக்கோட்டை மாவட்டம் மீமிசல் அருகே கோபாலப்பட்டிணத்தில் உள்ள பள்ளிவாசல்களில் இரவு நேர சிறப்பு தொழுகை நடைபெற்றது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments