கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் கோடை வெயில் & ரமலான் நோன்பு வருவதால் பயனாளிகள் நிழல் பெரும் வகையில் பந்தல் அமைக்க வேண்டும் என ஊராட்சி நிர்வாகத்திற்கு GPM மீடியா கோரிக்கை விடுத்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணத்தில் பெரிய பள்ளிவாசல் மற்றும் காட்டுக்குளம் பள்ளிவாசல் பகுதியில் ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகிறது. இங்கு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரேஷன் கார்டுகள் உள்ளது. இங்கு மாத மாதம் மக்கள் பொருட்கள் வாங்கி செல்கின்றனர்.
கோடை வெயில் மற்றும் நோன்பு காலம்
கோடை காலத்தில் பொதுவாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும். இந்தாண்டும் கோடை வெயில் வெளுத்து வாங்க தொடங்கியுள்ளது. தற்போது ரமலான் நோன்பு தொடங்கி உள்ளது.
எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு பொதுமக்கள் வெயிலில் அவதிப்படுவதை தடுக்க ஊராட்சி நிர்வாகம் சார்பில் பந்தல் அமைக்க பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் GPM மீடியா சார்பாக கேட்டுக்கொள்கின்றோம்.
கடந்த 2020-ஆம் ஆண்டு ஊரடங்கு மற்றும் வெயில் காரணமாக கோபாலப்பட்டிணம் ரேஷன் கடைகளில் சாமியான பந்தல் அமைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...
Facebook: https://www.facebook.com/GpmMedia/
Twitter: https://twitter.com/GpmMedia
Instagram: https://www.instagram.com/gpmmedia/
Youtube: https://www.youtube.com/c/GpmMedia
0 Comments
வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப் பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
1. கருத்து பகுதியில் கருத்துரிமை என்ற அடிப்படையில் வாசகர்கள் இடும் பின்னூட்டங்கள் மட்டுறுத்தலின்றி அனுமதிக்கப்படுகிறது.
2. இங்கு பதிவாகும் கருத்துக்கள் வாசகர்களின் சொந்த கருத்துக்களே. GPM மீடியாவின் கருத்துகள் அல்ல. வாசகர் பதியும் கருத்துக்கு அவரே முழுப் பொறுப்பு.
3. கருத்து பகுதியில் நாகரிகமற்ற வார்த்தைகள் பயன்படுத்துவதை வாசகர்கள் தவிர்க்க வேண்டுகிறோம். மேலும் வசை மொழிகள் / தகாக் கருத்துக்கள் / Anonymous - முன்னறிவிப்பின்றி நீக்கப்படும்.
4. தனிநபர் தாக்குதல் அடங்கிய கருத்துகளை வாசகர்கள் பதிவு செய்வதை யாரேனும் சுட்டிக் காட்டினால், அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படும்.
5. தங்களின் பெயர் மற்றும் சரியான மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கருத்து பதிவிட அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.