இந்த நம்பர்ல இருந்து கால் வந்தா எடுக்காதீங்க .. எச்சரிக்கை விடுக்கும் எஸ்பிஐ






குறிப்பாக, இரண்டு நம்பர்களை பட்டியலிட்டுள்ள எஸ்பிஐ, அதிலிருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

நாடெங்கிலும் வங்கி வாடிக்கையாளர்களை குறி வைத்து மேற்கொள்ளப்படும் மோசடி குறித்து எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை விடுத்துள்ளது. டிவிட்டர் பதிவுகள், எஸ்எம்எஸ், இ-மெயில் ஆகியவற்றின் மூலமாக மோசடி குறித்து தங்கள் வாடிக்கையாளர்களுக்கு எஸ்பிஐ வங்கி எச்சரிக்கை செய்துள்ளது.

வங்கியின் பெயரால் மோசடி நடத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, இரண்டு நம்பர்களை பட்டியலிட்டுள்ள எஸ்பிஐ, அதிலிருந்து கால் வந்தால் எடுக்க வேண்டாம் என்று கூறியுள்ளது.

எஸ்பிஐ இதை தெரிவிக்க காரணம் என்ன?

+91 -8294710946 மற்றும் +91 -7362951973 ஆகிய எண்களில் அழைப்பவர்கள் மோசடியாளர்கள் என்றும், அந்த அழைப்புகளை ஏற்க வேண்டாம் என்றும் எஸ்பிஐ தெரிவித்துள்ளது. இந்த மோசடி எண்களை அஸ்ஸாம் மாநில காவல்துறையின் சிஐடி பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர்

இதுகுறித்து அஸ்ஸாம் சிஐடி விடுத்துள்ள எச்சரிக்கை செய்தியில், “வாடிக்கையாளர்களுக்கு +91 -8294710946 மற்றும் +91 -7362951973 ஆகிய எண்களில் இருந்து அழைப்பு வருகிறது. மோசடியான லிங்க் ஒன்றை அனுப்பி அதில் கேஒய்சி விவரங்களை அப்டேட் செய்யுமாறு வலியுறுத்துகின்றனர். அதுபோன்ற லிங்க்களை வாடிக்கையாளர்கள் யாரும் கிளிக் செய்துவிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது’’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எஸ்பிஐ வங்கி, அதை ரீ டிவீட் செய்துள்ளது.

கேள்விகளுக்கு பதில் அளித்த எஸ்பிஐ

மோசடி தொடர்பாக வாடிக்கையாளர்களின் கேள்விகளுக்கு எஸ்பிஐ வங்கி பதில் அளித்தது. வாடிக்கையாளர் ஒருவருக்கு அளித்துள்ள பதிலில், “உங்கள் எச்சரிக்கை உணர்வை நாங்கள் பாராட்டுகிறோம். இதுகுறித்து தகவல் அளித்தமைக்கு நன்றி. எங்கள் ஐடி பாதுகாப்பு குழுவினர் இந்த விவகாரத்தில் தக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

யூசர் ஐடி, பாஸ்வேர்டு, டெபிட் கார்டு எண், பின் நம்பர், சிவிவி, ஓடிபி, பிறந்த தேதி போன்ற தனிப்பட்ட விவரங்கள் அல்லது வங்கி விவரங்களை கேட்கும் எஸ்எம்எஸ் / அழைப்புகள் / இ-மெயில் / போலியான லிங்க்-கள் போன்ற எதற்கும் பதில் அளிக்க வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். வங்கி ஒருபோதும் இதுபோன்ற விவரங்களை கேட்பதில்லை’’ என்று தெரிவித்துள்ளது.

புகார் தெரிவிக்கலாம்

வாடிக்கையாளர்களிடம் வங்கி விவரங்களை கேட்போர் அல்லது மோசடியான லிங்க் ஆகியவை குறித்து தெரிய வந்தால், அதுகுறித்து report.phishing@sbi.co.in என்ற இ-மெயில் முகவரியில் தகவல் தெரிவிக்கலாம் அல்லது 1930 என்ற தொடர்பு எண்ணில் புகார் கூறலாம். இது மட்டுமல்லாமல் மோசடி முயற்சி குறித்து அருகாமையில் உள்ள சட்ட அமலாக்க அமைப்புகளிடம் புகார் தெரிவிக்கலாம் என்று எஸ்பிஐ வங்கி கூறியுள்ளது.

ரிசர்வ் வங்கி எச்சரிக்கை

மோசடியாளர்கள் எப்படியெல்லாம் அணுகக் கூடும் என்ற விழிப்புணர்வு டிப்ஸ்களை பட்டியலிட்டு கையேடு ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதில், மெசேஜ் ஆப்கள் / எஸ்எம்எஸ் / சமூக வலைதளங்கள் ஆகியவற்றின் மூலமாக, உங்களுக்கு கடன் தருகிறோம் எனக் கூறி அணுகுவார்கள். உங்களுக்கு நம்பிக்கை ஏற்பட வேண்டும் என்பதற்காக ஏதேனும் ஒரு வங்கி அல்லது நிதி நிறுவனத்தின் லோகோவை புரொபைல் படமாக பயன்படுத்துவார்கள் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments