புதுக்கோட்டை மாவட்டம் ECR பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை கும்பலின் அட்டகாசம் ஆகியவற்றை மாவட்ட காவல்துறை அதீத கவனம் எடுத்து குற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் - பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்


ECR பகுதியில் தொடர்ச்சியாக நடைபெறும் கொலை, கொள்ளை, வழிப்பறி மற்றும் போதை கும்பலின் அட்டகாசம் ஆகியவற்றை மாவட்ட காவல்துறை அதீத கவனம் எடுத்து குற்றங்களைத் தடுத்து மக்களின் பாதுகாப்பை உறுதி செய்திடுக ,பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வலியுறுத்தல்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி அருகில் ஆவுடையார் பட்டினத்தில் நேற்று (24/4/22) இரவு சுமார் 11:30 மணி அளவில் ஆவுடையார் பட்டினத்தைச் சேர்ந்த தொழில் அதிபர் நிஜாம் என்பவர் அவரது வீட்டில் மர்ம கும்பலால் கை, கால்கள் கட்டி அரிவாளால்  கழுத்தில் வெட்டி கொலை செய்துவிட்டு மேலும் அவரின் மனைவியை மிரட்டி அவருடைய வீட்டில் இருந்த நகைகள் சுமார் 250 சவரன் மற்றும் ரொக்கப்பணம் சுமார் 28000/- ஆகியவைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 

கொலை செய்து நகை பணத்தை கொள்ளையடித்து சென்ற மர்ம நபர்கள் இதுவரை காவல்துறையால் கைது செய்யப்படவில்லை.

மேற்கண்ட கொலையாளிகளை காவல்துறை விரைந்து கைது செய்ய வேண்டும் எனவும்!

அதேபோல் தொடர்ச்சியாக புதுக்கோட்டை மாவட்டத்திற்கு உட்பட்ட ECR பகுதியில் கொலை, கொள்ளை, வழிப்பறி, திருட்டு, போதை கும்பலின் அட்டகாசம் ஆகியவை தொடர்ச்சியாக அரங்கேறிக் கொண்டிருக்கின்றது இதனால் அப்பகுதி மக்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி உள்ளது.

அந்த மக்களின் அச்சத்தைப் போக்கி பாதுகாப்பை உறுதிசெய்யும் வண்ணம் மாவட்ட காவல்துறை போதிய கவனம் எடுத்து இரவு நேர ரோந்து பணியை தீவிரப்படுத்தி மேலும் அந்தப் பகுதியின் போதை கும்பலையும் கட்டுப்படுத்தி மக்களின் பாதுகாப்பை உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன்.       

இப்படிக்கு, M.அபுபக்கர் சித்திக், 
மாவட்ட தலைவர், பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா, புதுக்கோட்டை மாவட்டம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments