கோபாலப்பட்டிணத்தில் கடும் வெயிலை குளிர வைத்த கோடை மழை






கோபாலப்பட்டிணத்தில் கடும் வெயிலை குளிர வைத்த கோடை மழை பெய்தது

 வங்கக் கடலில் நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய இயக்குனர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச் சலனத்தால் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் தென் மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார் கோவில் தாலுகா நாட்டாணிபுரசக்குடி ஊராட்சிக்குட்பட்ட மீமிசல் அருகே
கோபாலப்பட்டிணம் பகுதியில் கடந்த ஒரு மாதத்துக்கும் மேலாக கடும் வெயில் வாட்டி வதைத்து வந்தது.

இந்த நிலையில் நேற்று இரவு முதல் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. இதையடுத்து அதிகாலை 3.45 மணி அளவில் திடீரென கோடை மழை பெய்தது. இதனால் சாலையில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த மழையால் குளிர்ந்த காற்று வீசியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.




எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments