புதுக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்!


புதுக்கோட்டை வழியாக செல்லும் சிலம்பு ரயில் சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம்!

சிலம்பு எக்ஸ்பிரஸ்

2013-ம் ஆண்டு ரெயில்வே பட்ஜெட்டில் வாரம் ஒரு முறை சென்னை - காரைக்குடி எக்ஸ்பிரஸ் ரெயில் அறிவிக்கப்பட்டது. அந்த ரெயில் மானாமதுரை வரை நீட்டிக் பெயரில் அதன் முதல் சேவையை தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக சிலம்பு எக்ஸ்பிரசை செங்கோட்டை வரை நீட்டிக்க வேண்டும் என கோரிக்கை வலுத்தது. 4 ஆண்டுகள் தொடர் கோரிக்கையை 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் முதல் செங்கோட்டை வரை நீட்டிப்பு செய்யப்பட்டது

பின்னர் விருதுநகர் மற்றும் தென்காசி மாவட்ட மக்க ளின் தொடர் கோரிக்கை யாக சிலம்பு எக்ஸ்பிரசை தினசரி ரெயிலாக இயக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், 2 ஆண்டு கள் கழித்து பிப்ரவரி 2019-ம் ஆண்டு முதல் வாரம் 3 முறை இயங்க ஆரம்பித்தது. தற்போது சென்னை எழும்பூரில் இருந்து புதன், வெள்ளி மற்றும்  சனிக்கிழமைகளில்  புறப்படுகிறது. செங்கோட்டையில் இருந்து வியாழன், சனி மற்றும் ஞாயிற்றுக்கிழ மைகளில் புறப்படுகிறது.

சூப்பர் பாஸ்ட் ரயில்

சிலம்பு விரைவு வண்டி ஏப்ரல் 15 முதல் அதிவிரைவு வண்டியாக மாற்றப்படுவதால் வண்டி எண் மாற்றம் செய்ப்பட்டுள்ளது.

சிலம்பு அதிவிரைவு வண்டி புதிய வண்டி எண்:

“சென்னை எழும்பூர்-செங்கோட்டை: வண்டி எண்: 20681”
“செங்கோட்டை – சென்னை எழும்பூர்:
வண்டி எண்: 20682 

மாற்றப்படும் நாள்:

சென்னை எழும்பூரிலிருந்து: 15-ஏப்ரல்-22.
செங்கோட்டையிலிருந்து:16-ஏப்ரல்-22.

அதி விரைவு ரயிலாக இயங்கும் என தென்னக ரயில்வே அறிவித்துள்ளது.

வரும் 15/04/22 முதல் 16181/சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு விரைவு ரயில் 20681 என்ற புதிய ரயில் எண்ணை கொண்ட சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது 

20681/சென்னை எழும்பூர்-செங்கோட்டை சிலம்பு அதிவிரைவு ரயில்(புதன், வெள்ளி, சனி மட்டும்)

➤சென்னை எழும்பூர்- 08:25 PM(புறப்படும் நேரம்)

➤புதுக்கோட்டை-02:45/02:47 AM 
(தற்போதைய நேரம் 02:53/02:55AM)

➤தென்காசி- 08:03/08:05 AM 
(தற்போதைய நேரம் 08:18/08:20 AM)

➤செங்கோட்டை-08:45 AM(சேரும் நேரம்)
 (தற்போதைய நேரம் 08:55AM)

வரும் 16/04/22 முதல் 16182/செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிலம்பு விரைவு ரயில் 
20682 என்ற புதிய ரயில் எண்ணை கொண்ட சூப்பர் பாஸ்ட் ரயிலாக மாற்றம் செய்யப்படுகிறது 

20682/செங்கோட்டை-சென்னை எழும்பூர் சிலம்பு அதிவிரைவு ரயில்(வியாழன், சனி, ஞாயிறு மட்டும்)

➤செங்கோட்டை-04:50 PM(புறப்படும் நேரம்) (மாற்றமில்லை)

➤தென்காசி- 05:03/05:05 PM (மாற்றமில்லை)

➤புதுக்கோட்டை-10:08/10:10 PM (மாற்றமில்லை)

➤சென்னை எழும்பூர்- 04:55 AM(சேரும் நேரம்)  (தற்போதைய நேரம்-05:25 AM )

வாரம் முன்று நாட்கள் மட்டும் இயக்கப்படும் சிலம்பு ரயிலை தினசரி ரயிலாக மாற்றவேண்டும்  என்பதே புதுக்கோட்டை மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

சென்னை எழும்பூர் - செங்கோட்டை வழித்தடம்

தாம்பரம்
செங்கல்பட்டு
விழுப்புரம்
விருத்தாசலம்
அரியலூர்
திருச்சி
புதுக்கோட்டை
காரைக்குடி
சிவகங்கை
மானாமதுரை
அருப்புக்கோட்டை
விருதுநகர்
சிவகாசி
இராஜபாளையம்
ஸ்ரீவில்லிபுத்தூர்
சங்கரன்கோவில
கடையநல்லூர்
தென்காசி
செங்கோட்டை

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments