கீரனூரில் ரயில்கள் நின்று செல்லக்கோரி அன்னதானம்


புதுக்கோட்டை மாவட்டம், கீரனூா் ரயில் நிலையத்தில் அனைத்து ரயில்களும் நின்று செல்ல வலியுறுத்தி, பொதுமக்களுக்கு அன்னதானம் நடத்தி, வணிகா் சங்கத்தினா் வியாழக்கிழமை நூதனப் போராட்டத்தை நடத்தினா்.

கீரனூா் ரயில் நிலையம் திருச்சிக்கும், புதுக்கோட்டைக்கும் இடையில் மிக முக்கியமான பகுதிக்கான ரயில் நிலையமாக உள்ளது.

ஆனால், கடந்த 10 ஆண்டுகளாக இந்த ரயில் நிலையத்தில் எந்த ரயிலும் நிற்பதில்லை. இதனால் இப்பகுதி மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனா்.

கீரனூா் ரயில் நிலையத்தில் ரயில்கள் அனைத்தும் நின்று செல்லக் கோரி இப்பகுதியில் தொடா் போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக வியாழக்கிழமை பொதுமக்கள் சுமாா் 100 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாக்களுக்கு பந்தல் போடுவதைப் போல பந்தல் போட்டு, மேசை நாற்காலிகள் போட்டு வாழை இலையில் இந்த அன்னதானம் பரிமாறப்பட்டது. இதுபோன்ற தொடா் நூதனப் போராட்டங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக வணிகா் சங்கத்தினா் கூறினா்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments