கோபாலப்பட்டிணத்தில் நள்ளிரவில் திடீரென இடி, மின்னலுடன் கொட்டி தீர்த்த கன மழை!!கோபாலப்பட்டிணத்தில் நள்ளிரவில் தீடிரென இடி, மின்னலுடன் கன மழை பெய்தது.

இலங்கை மற்றும் அதனையொட்டியுள்ள பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, குமரி, நெல்லை மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியையொட்டிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருந்தது

மீமிசல் சுற்று வட்டார பகுதியில் கடந்த சில நாட்களாக கடும் வெயில் வாட்டி வதைக்கிறது. இதனால் சிறுவர் முதல் பெரியோர் வரை பெரும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

இந்நிலையில் நள்ளிரவில் திடீரென கருமேகங்கள் திரண்டு இடி, மின்னலுடன் கோடை மழை கொட்டி தீர்த்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. 

இந்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சிநிலை ஏற்பட்டதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments