மணமேல்குடி அருகே ஆவுடையார்ப்பட்டிணத்தில் தொழிலதிபர் கொலை வழக்கில் கைதானவர்களில் 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு


மணமேல்குடி தொழில் அதிபர் கொலை வழக்கில் கைதானவர்களில் 3 பேரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். 

இதற்காக அறந்தாங்கி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 

புதுக்கோட்டை மாவட்டம், மணமேல்குடி அருகே ஆவுடையார்பட்டினத்தை சேர்ந்தவர் முகமது நிஜாம் (வயது 54). தொழில் அதிபரான இவரை கொலை செய்து, அவரது மனைவியை கத்தியை காட்டி மிரட்டி கட்டிப்போட்டு 170 பவுன் நகைகளை மர்மநபர்கள் கொள்ளையடித்து விட்டு சென்றனர். இச்சம்பவம் தொடர்பாக மணமேல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் 8 பேரை போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்து 62 பவுன் நகைகளை மீட்டனர். மேலும் கொலைக்கு பயன்படுத்திய கத்திகள், கையுறைகள் உள்ளிட்டவற்றை கைப்பற்றினர். கைதானவர்கள் புதுக்கோட்டை மாவட்ட சிறையில் அடைக்கப்பட்டனர். கோர்ட்டில் மனு தாக்கலுக்கு... இந்த வழக்கில் தொடர்புடைய மணமேல்குடி அருகே உள்ள வீச்சூரை சேர்ந்த ஜோஸ் மில்டன், சம்பவம் நடந்த ஓரிரு நாளில் துபாய் தப்பிச்சென்றார். அவரை கைது செய்வதற்காக தூதரகம் மூலம் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் கைதான 8 பேரில் யூனுஸ் உள்பட 3 பேரை காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக அறந்தாங்கி கோர்ட்டில் மனு தாக்கல் செய்ய போலீசார் ஏற்பாடு செய்து வருகின்றனர். இன்று (வெள்ளிக்கிழமை) அல்லது ஓரிரு நாளில் கோர்ட்டில் மனு தாக்கல் செய்வார்கள் என கூறப்படுகிறது. மேலும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க முடிவு செய்துள்ளனர். இதில் எத்தனை நாள் அனுமதி கிடைக்கும் என்பது கோர்ட்டில் தெரியவரும். ஓட்டல் கொள்ளையடித்த நகைகளில் 40 பவுனை கேரளாவில் யூனுஸ் விற்றுள்ளார். அந்த நகைகளை மீட்க அவரிடம் தகவல் பெற்று, போலீசார் கேரளா செல்ல உள்ளனர். கொலையான முகமது நிஜாமுக்கு சொந்தமான இடத்தில் வாடகைக்கு கைதானவரில் யூசுப் ஓட்டல் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments