மே 20-ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் - பள்ளிக்கல்வித்துறை


ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை விடுப்பட்டுள்ள நிலையில், மே 20-ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. 

ஆண்டு இறுதித்தேர்வு இன்றுடன் முடிவதால் 1 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு நாளை முதல் விடுமுறை விடப்படுகிறது.கோடைவிடுமுறைக்கு பிறகு ஜூன் 13ம் தேதி பள்ளிகள் திறக்கப்படுகின்றன. இந்த கல்வி ஆண்டுக்கான கடைசி வேலை நாளும் இன்றுடன் முடிகிறது. இதையடுத்து, அடுத்த 2022-2023ம் கல்வி ஆண்டு ஜூன் மாதம் தொடங்கும் என்றும், அதனால், பிளஸ் 1 வகுப்பு தவிர மற்ற வகுப்புகளுக்காக பள்ளிகள் ஜூன் 13ம் தேதி திறக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்து இருந்தது.இதன்படி, நாளை முதல் 1 முதல் 9ம் வகுப்புகளுக்கு பள்ளிகளுக்கு விடுமுறை நாளாக இருக்கும். இதனிடையே பள்ளிகளில் 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு தற்போது நடக்கிறது. அவை 30ம் தேதியுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், 20-ம் தேதி வரை அனைத்து ஆசிரியர்களும் பள்ளிக்கு கட்டாயம் வர வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. விடைத்தாள் திருத்துவது உள்ளிட்ட அலுவல் சார்ந்த பணிகளை கவனிக்க கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments