வெளிநாட்டு வாழ் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP Clearance செய்வதற்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவிப்பு




 வெளிநாட்டு வாழ் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று இராமநாதபுரம் பாராளுமன்ற உறுப்பினர் நவாஸ் கனி MP  Clearance செய்வதற்கு உதவும் வகையில் உதவி எண்கள் அறிவித்துள்ளார்

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள முகநூல் பக்கத்தில் பதிவு

சமீபத்தில் சவுதி அரேபியா சென்றிருந்த போது அங்குள்ள வெளிநாட்டு வாழ் தமிழர்கள் முன்வைத்த கோரிக்கையை ஏற்று,
வெளிநாடுகளில் எதிர்பாராத விதமாக உயிரிழந்தோரின் பிரேதத்தை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் போது சென்னை விமான நிலையத்தில் Clearance - செய்வதற்கு உதவும் வகையில்,

இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர் அலுவலக உதவி எண்கள்:

+91 91769 89333
+91 97909 88688

(வெளிநாடுகளில் பணிபுரியும் தமிழக உறவுகள் எதிர்பாராத விதமாக உயிரிழக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களின் உடலை சொந்த ஊர்களுக்கு அனுப்பும் போது சென்னை விமான நிலையத்தில் Clearance செய்வதற்கு கால தாமதம் ஆகிறது விரைவாக Clearance செய்ய உதவிட வேண்டும் என்ற வெளிநாட்டு வாழ் தமிழர்களின் கோரிக்கையை ஏற்று என்னுடைய அலுவலகத்திலிருந்து உதவும் வகையில் இந்த எண்களை அறிவிக்கின்றேன்.

இறந்தவர்களின் உடல் அனுப்பப்படும் விபரங்களை குறிப்பிட்டுள்ள எண்ணில் தெரிவித்தால் சென்னை விமான நிலையத்தில் முன்கூட்டியே ஏற்பாடுகளை செய்து விரைவாக Clearance செய்து உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்கும் வரை முழுமையாக உதவுவார்.

எல்லாம் வல்ல இறைவன் அனைவருக்கும், ஆரோக்கியமான நல்வாழ்வையும் தந்து, விபத்துக்களிலிருந்தும், திடீர் மரணங்களிலிருந்தும், பாதுகாப்பானாக.,

கே நவாஸ்கனி
இராமநாதபுரம் நாடாளுமன்ற உறுப்பினர்,
மாநில துணைத்தலைவர் - இந்திய யூனியன் முஸ்லிம் லீக்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments