மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரண ஆவுடையார் கோவில் அருகே, ஏம்பல் கிராமம்



ஆவுடையார்கோவில் அருகே, ஏம்பல் கிராமத்தில், கும்பாபிேஷகம் நடந்த முத்தையா சுவாமி கோவிலுக்கு, ஜமாத்தார்கள் ஊர்வலமாக சென்று நேற்று விழா சீர் வழங்கினர்.

புதுக்கோட்டை மாவட்டம், ஆவுடையார் கோவில் அருகே, ஏம்பல் முத்தையா சுவாமி கோவில் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு, கடந்த 4ல் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.ஏம்பல் கிராம முஸ்லிம் ஜமாத்தார்கள் சார்பில், முத்தையா சுவாமி மற்றும் பிற தெய்வங்களின் கோவில்களுக்கு பழங்கள் மற்றும் 50 ஆயிரம் ரூபாயை தட்டுகளில் வைத்து, ஜும்மா மசூதியில் இருந்து, விழா சீர் என்ற பெயரில் ஊர்வலமாக மே 08 அன்று எடுத்துச் சென்றனர்.

தமிழகத்தின் சில கோவில்களில் திருவிழா, குடமுழுக்கு நடைபெற்றால், கிராமத்தில் உள்ள முஸ்லிம்கள், நட்புறவை மேம்படுத்தும் வகையில், மேள தாளங்களோடு சீர் கொடுப்பது வழக்கம். அதன்படி, மத நல்லிணக்கத்திற்கு முன்னுதாரணமாக ஏம்பல் கிராமத்து முஸ்லிம்கள் செய்துள்ளனர் என்று பொதுமக்கள் தெரிவித்தனர்.



எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments