புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டவாகனங்கள் மே 18-இல் ஏலம்






புதுக்கோட்டை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்கள் வரும் மே 18ஆம் தேதி பொது ஏலம் விடப்படவுள்ளன.

மாவட்ட ஆயுதப்படை திடலில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் நிஷா பாா்த்திபன் தலைமையில் 19 இரு சக்கர வாகனங்கள், 2 நான்கு சக்கர வாகனங்கள், 1 மூன்று சக்கர வாகனம் என மொத்தம் 22 வாகனங்கள் புதன்கிழமை (மே 18) ஏலம் விடப்படவுள்ளன.


ஏலம் விடப்படும் வாகனங்களை வரும் மே 16 மற்றும் 17ஆம் தேதிகளில் நேரில் பாா்வையிடலாம். பாா்வையிட்டவா்கள் ஏலத்தில் பங்கேற்க இரு சக்கர வாகனத்துக்கு ரூ. ஆயிரமும், 3 சக்கர வாகனத்துக்கு ரூ. 2 ஆயிரமும், 4 சக்கர வாகனத்துக்கு ரூ. 5 ஆயிரமும் முன்பணம் செலுத்த வேண்டும். ஏலம் எடுத்தவா்கள் ஏலத் தொகையுடன் ஜிஎஸ்டி வரியையும் சோ்த்து செலுத்த வேண்டும். ஏலத்தில் வாகனம் எடுக்காதவா்கள் முன்தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளலாம்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments