கோபாலப்பட்டிணத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா (நூருல் ஐன்) புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா
கோபாலப்பட்டிணத்தில் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா மீமிசல் அருகே உள்ள கோபாலப்பட்டிணம் ரஹ்மானியா பெண்கள் மதரஸா நூருல் ஐன் புதிய கட்டிட திறப்பு விழா மற்றும் பட்டமளிப்பு விழா பெண்கள் மதரஸா தெருவில் (அரஃபா 1-வது வீதி) 12.5.2022 வியாழக்கிழமை மாலை 5.00 மணியளவில் தொடங்கி இரவு 8.30 மணி வரை நடைபெற்றது.

ஆரம்பமாக மதரஸா கட்டிடத்தை
தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌனானா மௌலவி ஹாபிழ் P.A. காஜா முகையீனுத்தீன் பாக்கவி அவர்கள்  திறந்து வைத்தார்கள்.

விழாவிற்கு கோபாலப்பட்டிணம் முஸ்லிம் ஜமாஅத் தலைவர்கள் 
தலைமை வகித்தார்கள்.

 ஜனாப். J. முஹம்மது நஜீப் அவர்கள் கிராஅத் ஓதினார். 

பின்னர் ஹாஜி. மு.மு.ந.ஜாபர் சாதிக் அவர்கள் மதரஸா கட்டிடத்தை சபையோர்கள் முன்னிலையில் வக்ஃப் செய்தார்கள்.

அதன் பின்னர் மெளலானா மௌலவி.மு.மு.அ.ஹாமிம் முஸ்தபா அவர்கள் வரவேற்புரை ஆற்றினார்கள்.

 உள்ளூர் மற்றும் வெளியூர் உலமா பெருமக்கள்  வாழ்த்துரை வழங்கினார்கள்.

 அல் அஸ்ஹரியிய்யா அரபிக் கல்லூரியின் பேராசிரியர் மௌலானா மௌலவி ஹாபிழ் 
 H. ஜலாலுதீன் அன்வாரி அவர்கள் பட்டமளிப்பு விழா சிறப்புரை நிகழ்த்தினார்கள்.

தமிழ்நாடு ஜமாஅத்துல் உலமா சபையின் மாநில தலைவர் மௌலானா மௌலவி ஹாபிழ் P.A. காஜா முகையீனுத்தீன் பாக்கவி அவர்கள்  சிறப்பு பேருரை நிகழ்த்தினார்கள்.

ஜமாஅத் தலைவர் O.S.M. முஹம்மது அலி ஜின்னா மற்றும் A.S.M. செய்யது முஹம்மது ஆகியோர் பரிசு பொருட்கள் வழங்கினார்கள்.

வருகை தந்திருந்த உலமா பெருமக்களுக்கு  & முக்கியஸ்தர்களுக்கு  ஊர் ஜமாத்தின் சார்பாக பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டது.

ஜமாத் செயலாளர் M.ராஜா முஹம்மது நன்றியுரை ஆற்றினார்கள்.

மௌலவி ஹாபிழ் A.S. இம்தாதுல்லாஹ் ஃபைஜி அவர்கள் துஆ ஓதினார்.

இந்நிகழ்வில் 56 ஆலிமாக்கள் பட்டம் பெற்றார்கள். அதனை அவர்களின் குடும்ப உறுப்பினர்களிடம் மேடையில் வைத்து வழங்கப்பட்டது.

விழாவில் கோபாலப்பட்டிணம் ஜமாத்தார்கள் , ஆலிம்கள்‌ , சிறுவர்கள், இளைஞர்கள், பெரியவர்கள் ஆண்கள் பெண்கள் ஊடக நண்பர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

விழாவில் பெண்கள் கலந்து கொள்வதற்கு மதரஸாவில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments