அறந்தாங்கியில் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அறந்தாங்கி அருகே கூத்தாடிவயல் கிராமத்திற்கு செல்லும் சாலை குண்டும், குழியுமாக உள்ளது. இந்த சாலையில் வாகனங்கள் செல்ல மிகவும் சிரமமாக உள்ளது. இந்த சாலையை சீரமைத்து பல ஆண்டுகள் ஆகிவிட்டது. அதன் பிறகு மீண்டும் சாலை சீரமைக்காமல் உள்ளது. இந்த சாலையை உடனே சீரமைக்க வேண்டும் என கோரி கூத்தாடிவயல் பொதுமக்கள் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் மறியலில் ஈடுபட்டனர். 

இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த தாசில்தார் காமராஜர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஆகியோர் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இன்னும் 2 மாதங்களில் சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்ததையடுத்து  மறியலை கைவிட்டு அனைவரும் கலைந்து சென்றனர். 

இதனால் அறந்தாங்கி-பட்டுக்கோட்டை சாலையில் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments