பொன்னமராவதி அருகே பயங்கரம்:2 குழந்தைகளை கழுத்தை நெரித்து கொன்ற தாய்
புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதி அருகே கருப்பர்கோவில் பட்டி பகுதியை சேர்ந்தவர் பொன்னு அடைக்கன் (வயது 28). கூலித்தொழிலாளி. இவரது மனைவி பஞ்சு (21). இவர்களுக்கு ஜெகதீசன் (2) மற்றும் 8 மாத குழந்தை தர்ஷினியா என 2 பிள்ளைகள். 

கணவன்- மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. இந்நிலையில், நேற்று இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ேகாபமடைந்த பொன்னு அடைக்கன் வீட்டில் இருந்து வெளியே சென்று விட்டார். இதையடுத்து செல்போன் மூலம் பஞ்சு, பொன்னு அடைக்கனை வீட்டிற்கு வருமாறு அழைத்துள்ளார். வீட்டிற்கு வரவில்லை என்றால் குழந்தைகளை கொன்று விடுவேன் என்று மிரட்டியுள்ளார். ஆனால் பொன்னு அடைக்கன் வீட்டிற்கு வரவில்லை. 

குழந்தைகள் கொலை 

இதனால் ஆத்திரமடைந்த பஞ்சு தனது 2 குழந்தைகளையும் கழுத்தை ெநரித்து கொலை செய்துள்ளார். இந்நிலையில், வீட்டிற்கு வந்த பொன்னு அடைக்கன் குழந்தைகள் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பொன்னமராவதி  போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின் பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments