மணமேல்குடியில் மணல் அள்ளிய மினி லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல்
அரிமளம், மணமேல்குடியில் மணல் அள்ளிய மினி லாரி உள்பட 3 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ரகசிய தகவல்

புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியம் அம்புராணி அணைக்கட்டு பகுதியில் சிலர் ஆற்று மணல் அள்ளுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் கே.புதுப்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அப்போது போலீசாரை கண்டதும் மணல் அள்ளிக்கொண்டிருந்தவர்கள் மினி லாரியை அங்கேயே விட்டுவிட்டு தப்பி சென்றனர். இதையடுத்து அந்த மினி லாரியை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வாகனங்கள் பறிமுதல்

இதேபோல் மணமேல்குடி சிறுகரை வெள்ளாற்றில் மணல் அள்ளுவதாக ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் மணமேல்குடி தாசில்தார் ராஜா தலைமையிலான அதிகாரிகள் சிறுகரை பகுதி மற்றும் கிருஷ்ணாஜிபட்டினம் ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர். அப்போது 2 சரக்கு வாகனங்களில் மணல் அள்ளி வந்தவர்கள் அந்த வாகனங்களை அங்கேயே நிறுத்திவிட்டு தப்பி சென்றனர்.

இதையடுத்து, அதிகாரிகள் அந்த சரக்கு வாகனங்களை மணலுடன் பறிமுதல் செய்து மணமேல்குடி போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments