புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தில் 85 கிராமங்கள் தேர்வு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை காணொலியில் தொடங்கி வைக்கிறார்
வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் புதுக்கோட்டை மாவட்டத்தில் 2021-2022 ஆம் ஆண்டிற்கு 85 கிராம ஊராட்சிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. 
இத்திட்டத்தினை மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.05.2022 
திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னையிலிருந்து காணொலிகாட்சி மூலம் தொடங்கி வைக்கவுள்ளார்கள்.

இத்திட்டத்தினை செயல்படுத்த புதுக்கோட்டை மாவட்டத்தில், 

புதுக்கோட்டை  வட்டாரத்தில் 

வடவாளம், 9ஏ நத்தம்பண்னை, கவிநாடு மேற்கு, முள்ளூர், கவிநாடு  கிழக்கு, பெருங்களூர் ஆகிய கிராம ஊராட்சிகளும், 

கந்தர்வகோட்டை வட்டாரத்தில்  

கல்லாக்கோட்டை, துவார், குளத்தூர், சுந்தம்பட்டி ஆகிய கிராம ஊராட்சிகளும்,  

திருவரங்குளம் வட்டாரத்தில் 

மாங்காடு, வடகாடு, வெண்ணாவல்குடி, எல்.என.புரம்,  கொத்தமங்கலம், கல்லாலங்குடி, குலமங்களம் வடக்கு, குலமங்களம் தெற்கு ஆகிய  கிராம ஊராட்சிகளும், 

கறம்பக்குடி வட்டாரத்தில் 

மாங்கோட்டை, முள்ளங்குறிச்சி,  பிலாவிடுதி, மழையூர், கலபம், ஓடப்பவிடுதி, வாண்டான்விடுதி கிராம ஊராட்சிகளும்  

அறந்தாங்கி வட்டாரத்தில் 

மறமடக்கி, திருநாளூர், பெருங்காடு, அரசர்குளம் கீழ்பாதி, குரும்பூர், நாகுடி, ஆவணத்தான்கோட்டை, ஆயிங்குடி, ஏகப்பெருமாளூர்,கம்மங்காடு ஆகிய கிராம ஊராட்சிகளும், 

ஆவுடையார்கோவில் வட்டாரத்தில்

கரூர்,  வீரமங்களம், புத்தாம்பூர், சாத்தியகுடி, திருப்புவனவாசல், நாட்டானிபுரசகுடி,  பெருநாவளூர், பொன்னமங்கலம் ஆகிய கிராம ஊராட்சிகளும், 

மணமேல்குடி  வட்டாரத்தில்

வெட்டிவயல், கீழமஞ்சகுடி, காரக்கோட்டை, கோட்டைபட்டினம் ஆகிய  கிராம ஊராட்சிகளும் 

திருமயம் வட்டாரத்தில் 

துளையானூர், ஆதனூர், லெம்பலக்குடி, மேலூர்,  அரசம்பட்டி கிராம ஊராட்சிகளும், 

அரிமளம் வட்டாரத்தில் 

தேக்காட்டூர், திருவாக்குடி,  வாளரமாணிக்கம், கடியாபட்டி, கும்மங்குடி கிராம ஊராட்சிகளும், 

பொன்னமராவதி  வட்டாரத்தில் 

ஆலவயல், அரசமலை, மரவாமதுரை, வார்பட்டு, ஒலியமங்கலம்,
திருக்களாம்பூர் கிராம ஊராட்சிகளும், 

அன்னவாசல் வட்டாரத்தில் 

கத்தலூர், பூதக்குடி,  கொடும்பாளூர், மண்டையூர், விரலூர், இராஜாளிபட்டி, இராஜகிரி, நம்பம்பட்டி ஆகிய  கிராம கிராம ஊராட்சிகளும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

விராலிமலை வட்டாரத்தில்

கத்தலூர், பூதக்குடி, கொடும்பாளூர், மண்டையூர்,  விரலூர், இராஜாளிபட்டி, இராஜகிரி, நம்பம்பட்டி கிராம ஊராட்சிகளும், 

குன்னான்டார்கோவில் வட்டாரத்தில் 

பள்ளத்துப்பட்டி, அண்டக்குளம், புலியூர்,  மேலபுதுவயல், டி.கீழையூர், தெம்மாவூர் கிராம ஊராட்சிகளும் தேர்வு  செய்யப்பட்டுள்ளன. 

இத்திட்டம் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களால் 23.05.2022  திங்கட்கிழமை அன்று காலை 10.00 மணி அளவில் சென்னையிலிருந்து  காணொலிக்காட்சி மூலம் தொடங்கி வைக்கப்பட உள்ளது.
இந்த கிராம ஊராட்சிகளில் வேளாண்மை-உழவர் நலத்துறை, தோட்டக்கலை  மற்றும் மலைப்பயிர்கள் துறை, வேளாண்மை பொறியியல் துறை, வேளாண்மை  விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, விதைச்சான்று மற்றும் அங்க  சான்றளிப்புத்துறை, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை, ஊரக வளர்ச்சித் துறை, கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை, கால்நடை பராமரிப்பு மற்றும்  பால்வளத்துறை, நீர்வள ஆதாரத்துறை, மீன்வளத் துறை, தமிழ்நாடு மின்சார வாரியம்  மற்றும் கைத்தறி, கைவினைப்பொருட்கள், நெசவு மற்றும் காதித்துறை ஆகிய  துறைகளை ஒருங்கிணைத்து வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. 

மேலும் தொடக்கவிழாவில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் மூலம்  நெட்டை இரக தென்னங்கன்றுகள் விநியோகம், வயல் வரப்புகளில் பயறு சாகுபடி  செய்வதற்கு பயறு விதைகள் விநியோகம், கைத்தெளிப்பான்கள் மற்றும் விசைத்தெளிப்பான்கள் விநியோகம் செய்யப்படும். தோட்டக்கலை மற்றும்  மலைப்பயிர்கள் துறையின் மூலம் வீட்டு தோட்டம் அமைப்பதற்கு விதைகள்  விநியோகம், பிளாஸ்டிக் கூடைகள், பிளாஸ்டிக் டிரம் விநியோகம், வரப்பு ஓரங்களில்  நடுவதற்கு பழச்செடிகள் மற்றும் பழக்கன்றுகள் விநியோகம் செய்யப்பட உள்ளது. 

எனவே இவ்விழாவில் அனைத்து விவசாயிகள் மற்றும் விவசாய சங்க 
பிரதிநிதிகள் கலந்துகொண்டு பயன்பெற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர்  திருமதி.கவிதா ராமு, இ.ஆ.ப., அவர்கள் தெரிவித்துள்ளார். 

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments