புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்களை திருத்த 5 மையங்கள் தேர்வு


தமிழகத்தில் 10, 11, 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெற்று வருகிறது. 12-ம் வகுப்புக்கு 28-ந் தேதியுடனும், 10-ம் வகுப்பிற்கு 30-ந் தேதியுடனும், 11-ம் வகுப்பிற்கு 31-ந் தேதியுடனும் தேர்வு நிறைவடைகிறது. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி வருகிற 1-ந் தேதி முதல் தொடங்குகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்த 5 மையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. இதில் எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 2 மையங்களிலும், பிளஸ்-1, பிளஸ்-2 பொதுத்தேர்வு விடைத்தாள்கள் 3 மையங்களிலும் திருத்தப்படுகின்றன. இதற்கான ஏற்பாடுகளை கல்வித்துறை அதிகாரிகள் மேற்கொண்டுள்ளனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments