விராலிமலை அருகே லாரி மீது அரசு பஸ் மோதல்; 15 பயணிகள் காயம்
மதுரையிலிருந்து கடலூருக்கு 40 பயணிகளை ஏற்றி கொண்டு நேற்று முன்தினம் நள்ளிரவு அரசு பஸ் ஒன்று சென்று கொண்டிருந்தது. பஸ் விராலிமலை வானதிராயன்பட்டி பிரிவு சாலை அருகே மதுரை- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் தூத்துக்குடியிலிருந்து திருச்சிக்கு சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராதவிதமாக பஸ் மோதியது. இதில் பஸ்சில் பயணம் செய்த கடலூரை சேர்ந்த பானுமதி, ஜெயஆறுமுகம், முஸ்தபா, புதுக்கோட்டையை சேர்ந்த சகாயராணி, வில்லிகிருஸ்டி உள்பட 15 பேர் காயமடைந்தனர். மற்ற பயணிகள் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதுகுறித்து தகவல் அறிந்த விராலிமலை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்த 15 பேரையும் மீட்டு சிகிச்சைக்காக விராலிமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து விராலிமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments