மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் சாலையை சீரமைத்து தரக்கோரி கிராமமக்கள் மனு அளித்தனர்.

புதுக்கோட்டை புதுக்கோட்டை: மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் புதுக்கோட்டை மாவட்ட மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட வருவாய் அலுவலர் செல்வி தலைமை தாங்கினார். கூட்டத்தில் முதியோர் உதவித்தொகை, வேலைவாய்ப்பு, கல்வி உதவித்தொகை, பட்டாமாறுதல் போன்ற பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய 360 மனுக்களை அளித்தனர். சென்னையை சேர்ந்த ஆல் தி சில்ரன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் சார்பில் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலமாக செயல்படும் மனநலம் மற்றும் மனவளர்ச்சி குறைபாடு உடையோருக்கான 4 இல்லங்களில் உள்ள 150 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.75 ஆயிரம் மதிப்பிலான போர்வைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டது. 

கூட்டத்தில் தனி மாவட்ட வருவாய் அலுவலர் (காவிரி -வைகை- குண்டாறு) ரம்யாதேவி, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) தங்கவேல், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் உலகநாதன் மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர். Also Read - பிளஸ்-2 மாணவன் தூக்குப்போட்டு தற்கொலை சாலையை சீரமைக்க வேண்டும் அரிமளம் ஒன்றியம், கீழப்பனையூர் ஊராட்சி, காமாட்சிபுரம், வடக்கு குடியிருப்பு, தெற்கு குடியிருப்பு, புதூர் கிராமமக்கள் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

 அந்த மனுவில், புதுக்கோட்டை மாவட்டம் அரிமளம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழப்பனையூர் ஊராட்சியில் உள்ள காமாட்சிபுரம் வடக்கு குடியிருப்பு மற்றும் தெற்கு குடியிருப்பு புதூர் கிராமத்திற்கு கடந்த 14 மாதங்களுக்கு முன்பாக பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தின் சார்பாக சாலை அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளனர். இந்தநிலையில் ஒரு ஆண்டுகளுக்கு மேலாக தோண்டப்பட்ட சாலையை மேற்கொண்டு பணிகள் செய்யாமல் அப்படியே கிடப்பில் உள்ளது. இதனால் அந்த பகுதியில் வசிக்கும் சுமார் 2 ஆயிரம் குடும்பங்கள் ஊரில் இருந்து வெளியே செல்வதற்கு மிகவும் சிரமப்படுவதாகவும், அவசரமாக மருத்துவமனைக்கு செல்வதற்கும் பயனற்ற சாலையாக உள்ளது. எனவே உடனடியாக சாலையை சீரமைத்து தர வேண்டும் என்று கூறியிருந்தனர். இதேபோல் பல்வேறு மனுக்களை பொதுமக்கள் கலெக்டர் அலுவலகத்தில் கொடுத்தனர்.


 
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments