அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு




ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 15 பேர் மீது வழக்குப்பதிவு 

அறந்தாங்கி அருகே பணம் வைத்து சூதாடிய ஊராட்சி மன்ற தலைவர் உள்பட 15 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். 
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கி அருகே அரசர்குளம் மாணிக்கம் குடியிருப்பில் பணம் வைத்து 15 பேர் சூதாடிக் கொண்டிருந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த புதுக்கோட்டை மாவட்ட தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அங்கு பணம் வைத்து சூதாடிய அடைக்கலம் (வயது 60), சேக் இஸ்மாயில் (45), ஜெயினூல் அன்சாரி (40), காளிதாஸ் (33), அன்வர்தீன் (36), வெங்கடேசன் (42), கிருஷ்ணாஜிப்பட்டினம் ஊராட்சி மன்ற தலைவர் சாகுல் ஹமீது (63), ரவீஸ் (42), நைனா முகமது (45), செந்தில்வேல் (44), மகாதீர் முகமது (38), விக்னேஷ் (39) கமால் பாஷா (61), பழனிவேல் (47), நிஜாமுதீன் (35) ஆகிய 15 பேரையும் சுற்றிவளைத்து பிடித்தனர். பணம் பறிமுதல் அவர்களிடமிருந்து ரூ.6 லட்சத்து 46 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். மேலும் 15 பேர் மீதும் நாகுடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments