கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம்
SDPI கட்சியின் புதுக்கோட்டை கிழக்கு மாவட்ட செயற்குழு கூட்டம் 
கிருஷ்ணாஜிப்பட்டிணத்தில் மாவட்ட அலுவலகத்தில்  (24.05.2022) நேற்று நடைபெற்றது.

இக்கூட்டத்தை மாவட்ட பொதுச்செயலாளர் S.A.M.அரபாத் வரவேற்புரை நிகழ்த்த மாவட்ட தலைவர் U.செய்யது அஹமது அவர்கள் தலைமை தாங்கினார். 

இந்நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக தஞ்சை மண்டல தலைவர் தப்ரே ஆலம் அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். 

மேலும் மாவட்ட துணை தலைவர் PMS.குலாம் முகமது, மாவட்ட செயலாளர் முகமது சாலிஹ் , தொகுதி நிர்வாகிகள் மற்றும் Women India Movement -ன் மாவட்ட தலைவி ஆகியோர் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.இக்கூட்டத்தில் கட்சி வளர்ச்சி மற்றும் மாவட்டம் சம்பந்தமாக விவாதிக்கப்பட்டு பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இறுதியாக அறந்தாங்கி வடக்கு தொகுதி தலைவர் M.முகமது அஜீஸ் அவர்கள் நன்றியுரையாற்ற நிகழ்ச்சி நிறைவுபெற்றது.

வெளியீடு,
சமூக ஊடக அணி
SDPI கட்சி
புதுக்கோட்டை கிழக்கு மாவட்டம்
எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments