புதுக்கோட்டை மாவட்டத்தில் கடலில் காற்று வேகம் அதிகாிப்பு: புதுக்கோட்டை மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை




புதுக்கோட்டை மாவட்டத்தில் கோட்டைப்பட்டினம் மற்றும் ஜெகதாப்பட்டினத்தில் 400-க்கும் மேற்பட்ட விசைப்படகு மீனவர்களும், கட்டுமாவடி முதல் அரசங்கரை வரை ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாட்டுப்படகு மீனவர்களும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில் கடலில் காற்றின் வேகம் அதிகமாக இருப்பதால் நாட்டுப்படகு மற்றும் விசைப்படகு மீனவர்கள் யாரும் இன்று (திங்கட்கிழமை) முதல் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு மீன்பிடிக்க செல்லக்கூடாது என்றும், படகுகளை பாதுகாப்பான இடத்தில் கரையேற்றி வைக்கவும், மீன்பிடி உபகரணங்களை பாதுகாப்பான இடத்தில் வைத்துக் கொள்ளவும் மீன்வள துறையினர் அறிவித்துள்ளனர்.
 

எங்களுடன் இணைந்திருங்கள்

எங்களுடைய செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள பின்தொடருங்கள்:


Post a Comment

0 Comments