புதுக்கோட்டை மாவட்டத்தில் திருக்குறள் குறளோவிய போட்டியில் வென்ற 5 மாணவிகளுக்கு காசோலை புதுக்கோட்டை மாவட்ட கலெக்டர் வழங்கினார்
        தமிழ் இணைய கல்விக்கழகம் சார்பில் நடைபெற்ற திருக்குறள் குறளோவிய போட்டியில் வெற்றிபெற்ற புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலை மற்றும் சான்றிதழ்களை, கலெக்டர் கவிதா ராமு வழங்கினார். அப்போது அவர் தெரிவித்ததாவது; மாநில அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ‘குறளோவியம்” என்ற பெயரில் ஓவியப் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் சிறந்த 365 ஓவியங்கள் தெரிவு செய்து, போட்டியில் வெற்றி பெற்ற முதல் மூன்று இடங்களைப் பெற்ற பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் பரிசுகள் வழங்கப்பட்டது. மேலும் இக்குறளோவிய போட்டியில் தெரிவு செய்யப்பட்ட 365 ஓவியங்கள் திருக்குறள் குறளோவியம் தினசரி நாட்காட்டி புத்தகமாக அச்சிடப்பட்டு, பொதுமக்களுக்காக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இத்திருக்குறள் குறளோவியப் போட்டியில் வெற்றி பெற்று சிறப்பு பரிசாக ரூ.5,000மும், ஊக்கப் பரிசாக ரூ.1,000மும் மற்றும் அனைத்து மாணவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 5 மாணவிகளுக்கு, காசோலைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளது. அதன்படி, கல்லாக்கோட்டை அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.2 மாணவி அகல்யா மற்றும் பிலிவலம் மவுண்ட் சீயோன் சர்வதேச பள்ளியை சேர்ந்த பிளஸ்-1 மாணவி பவித்ரா பானு ஆகிய 2 மாணவிகளுக்கு தலா சிறப்பு பரிசாக ரூ.5,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது. மேலும் ஆவுடையார்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.1மாணவி தேவிகா, பொன்னமராவதியை சேர்ந்த 9ம் வகுப்பு மாணவி தேஜன்யா, பொன்னமராவதி அமல அன்னை மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பிளஸ்.2 மாணவி கீதா ஆகிய 3 மாணவிகளுக்கு தலா ஊக்கப் பரிசாக ரூ.1,000 காசோலையும், சான்றிதழ்களும் வழங்கப்பட்டது.


எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments