ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்






ஆவுடையார்கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின்  24-வது ஒன்றிய மாநாடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது,  

கூட்டத்திற்கு நிர்வாகி கணேசன் தலைமை வகித்தார். கொடியேற்றத்துடன் காலை 10 மணிக்கு மாநாடு தொடங்கியது. மாநாட்டிற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில நிர்வாக குழு உறுப்பினர் லெனின்  கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார்.  

மாநாட்டில்ஆவுடையார் கோவில் அரசு மருத்துவமனையை மேம்படுத்தி மகப்பேறு பிரிவு இயக்கப்பட வேண்டும், அமரடக்கியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்பட வேண்டும்,கருப்பூர் கிராமத்தில் மண் சாலைகளை தார் சாலையாக மாற்றி அமைக்க வேண்டும், 

இந்த ஆண்டு (2021-22) குலை நோய் மற்றும் புகையானால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்கப்பட வேண்டும்,  

ஆவுடையார்கோவில் நான்கு கடை வீதியிலும் மழைக்காலங்களில் கழிவுநீர் தேங்குவதை தடுக்க பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...



Post a Comment

0 Comments