கோட்டைப்பட்டிணத்தில் மீனவர்களுக்கு பயிற்சி


புதுக்கோட்டை மாவட்டம், கோட்டைப்பட்டினம் பேரிடர் கட்டிடத்தில் மீனவர்களுக்கான உயிர்காக்கும் பயிற்சி 3 நாள் நடைபெற்றது. 

இந்த பயிற்சியில் மீனவர்கள் கடலில் தவறி விழுந்தால் அவர்களை எவ்வாறு காப்பாற்றுவது மற்றும் விபத்தில் சிக்கினால் எவ்வாறு முதலுதவி செய்வது உள்ளிட்டவை குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
 
பயிற்சி முகாமில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் சின்ன குப்பன் மற்றும் பயிற்றுனர்கள், மீன்வளத்துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். 

இந்த பயிற்சி முகாமில் சுமார் 50-க்கும் மேற்பட்ட மீனவர்கள் கலந்து கொண்டனர். முடிவில் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது.

எங்களுடைய இணையதள செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள எங்களுடைய சமூக இணையப்பக்கத்தை Like, Follow, Joint மற்றும் Subscribe செய்து கொள்ளுங்கள்...Post a Comment

0 Comments